காப்புறுதிகள்
சுவிஸ் நாட்டில் பல்வேறு காப்புறுதிகள் உள்ளன. இவற்றுள் ஒருசில கட்டாயம் செய்யப்பட வேண்டியவை, ஏனையவை சுயவிருப்பத்தின் அடிப்படையிலானவை, இருப்பினும் இவை பயனுள்ளவை. இவை பற்றி உங்கள் காப்புறுதிக் கூட்டுத்தாபனப் பிரதிநிதியிடம் அல்லது தொழில் வழங்குநருடன் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
கட்டாயம் செய்யப்படவேண்டியவை:
- மருத்துவ- மற்றும் விபத்துக் காப்புறுதி
- வாகன- பொறுப்புக் காப்புறுதி
நீங்கள் வேலை செய்யும் பட்சத்தில், உங்கள் வேலைவழங்குநர் உங்களை கீழ்வருவனவற்றுக்கெதிராக காப்புறுதி செய்கின்றார்:
- வேலையிழப்பு
- விபத்து
- அதிக வயதையடைதல் / ஊனமுற்றிருத்தல்
- தாய்மையடைந்திருக்கையிலும் இராணுவ சேவையின் பொழுதும் ஊதியமின்மை
இதற்கான கட்டணங்களை உங்கள் வேலை வழங்குநருடன் நீங்கள் பகிர்கின்றீர்கள். உங்கள் பங்கு நேரடியாகவே உங்கள் ஊதியத்திலிருந்து கழிக்கப்படுகின்றது.
இதன் கீழும் பார்க்கவும்: சமூகக்காப்புறுதிகள் என்ற தொடர்பு