Navigieren auf Kanton Zug

சமூகநலக்காப்புறுதிகள்

Informationen zum Sozialversicherunssystem Schweiz auf tamilisch

சுவிற்சர்லாந்தின் சமூகநலக்காப்புறுதி வலையமைப்பு மிகவும் சிறந்த முறையில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

இது தொடர்பான சிறுகையேடு ஒன்றினை கீழுள்ள இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்

முற்காப்பு ஓய்வூதியத்திட்டம் மூன்று பகுதியான  அலுவலகங்களைக் கொண்டுள்ளது:

1. வது அலுவலகம் AHV/IV/EO/ALV 

வேலை செய்யும் எல்லா நபர்களும் தமது பங்களிப்புக் கட்டணங்களை 1.வது அத்திவாரம் என்ற AHV/IV/EO/ALV அலுவலகத்திற்கு செலுத்துகின்றனர். தமது சலுகைக் கொடுப்பனவுகள் நேரடியாகவே தமது ஊதியத்திலிருந்து கழிக்கப்பட்டு அவற்றை இவர்கள் வேலைவழங்குநருடன் பகிர்ந்து கொள்கின்றனர். வேலையில்லாத நபர்கள் அதிகளவான ஓய்வூதியத்தினை முதிய வயதில் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக சுயவிருப்பின் பேரில் பங்களிப்புக் கட்டணங்களைச் செலுத்த முடியும். ஓய்வூதியம் பெறுபவர்கள்ää ஊனமுற்றோர் மற்றும் எஞ்சியுள்ள தங்கி இருப்பவர்களுக்கு முதலாவது வது அத்திவாரம் என்ற AHV/IV/EO/ALV    அலுவலகம் அரச ஓய்வூதியத்தினை வழங்குகின்றது.  

வேலையற்றோர் காப்புறுதி மற்றும் (Erwerbsersatz bei Militärdienst und Mutterschaft) போன்றவற்றுக்கான கட்டணங்கள் நேரடியாகவே சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

தாய்மையடைந்திருத்தல்
குறைந்த பட்சம் 5 மாதங்களுக்கு வேலை செய்திருக்கும் பட்சத்தில் தாய்மார்கள்நட்டஈட்டினை 14 வாரங்களுக்குப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை தாய்மார்களுக்கு உண்டு. பொருளாதார ரீதியாக மோசமான நிலையிலுள்ள தாய்மையடைந்திருக்கும்  பெண்களுக்கு அவர்கள் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் பட்சத்திலும் அவர்களுக்கு உதவி அவசியமாக இருக்கும் பட்சத்திலும்சூக் மாநிலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கொடுப்பனவுக் கட்டணங்களை வழங்குகின்றது.  www.zg.ch/alk - டொச்

2.வது அலுவலகம்; பீவிஜி 2. Säule BVG (Pensionskasse)

ஓவ்வொரு வேலைவழங்குநரும் ஓய்வூதிய நிதியம் ஒன்றில் கட்டாயமாக இணைந்திருத்தல் வேண்டும். வேலைவழங்குநரும் வேலைபெறுநரும், அதாவது இருவரும் சோந்து, இந்நிதியத்தில் பணம் செலுத்துகின்றனர்.வேலைபெறுநர் ஓய்வூதியத்தினை அடையும்பொழுது அல்லது இறப்பின் பொழுது அல்லது ஊனமுற்றிருக்கையில் அவருக்கும் அவரைச் சார்ந்திருக்கும் உறவினர்களுக்கும் இது ஒரு மேலதிக ஓய்வூதியமாகும். ஓய்வூதியம் சேமிக்கப்பட்ட தொகையினைப் பொறுத்திருக்கும். உங்களது வேலைவழங்குநரிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

3.வது அலுவலகம்; (3. Säule)

காப்புறுதி நிறுவனங்களும் வங்கிகளும் மேலதிக முதலீட்டுத்தொகை ஒன்றினை முதிய வயதையடைந்த காலத்தில் வைப்பிலிடுவதற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றன. இது வரிதொடர்பாக சாதகமான நிபந்தனைகளைக் கொண்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு முன்னேற்பாட்டு முறையானது சுயவிருப்பத்தின் பேரில் அமைந்ததாகும். உங்களது வங்கியில் இது தொடர்பாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

குடும்ப உதவித் தொகைகள்  (Familienzulagen)
வேலைபெறுநர்களும் வேலையற்றோரும் மோசமான (குறைந்தளவு) பொருளாதார நிலைமகளின்பொழுது குழந்தைகளுக்கான விசேட கொடுப்பனவுகளையும் கற்கைநெறிகளுக்கான விசேட கொடுப்பனவுகளையும் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். குடும்ப உதவித் தொகைகளைப் பெறுவதற்கு சுயதொழில் செய்பவாகளுக்கு இவ் உரிமை இல்லை. குடும்ப உதவித் தொகைகள் சூக் மாநிலத்தில் குழந்தைகளின் வயதினைப் பொறுத்து 300,-இலிருந்து 350,- பிராங்குகளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு வேலைவழங்குநரூடாக மேற்கொள்ளப்படுகின்றது.

Ausgleichskasse Zug
Baarerstrasse 11
6304 Zug
Tel. +41 41 560 47 00
info@akzug.ch 
www.akzug.ch - டொச்
 

Weitere Informationen

Fusszeile

Deutsch