Navigieren auf Kanton Zug

சுகாதாரம்

Notfall tamilisch

சுவிற்சர்லாந்தும் சூக் மாநிலமும் அதி சிறந்த சுகாதாரநலத் திட்டத்தினை வழங்குகின்றது.

வேற்று மொழிகளையுடைய வைத்தியர்களின் பட்டியல்

அவசரநிலை:

அம்புலன்ஸ் மற்றும் அவசர சேவை 144
காவல் துறை அவசர அழைப்பு 117
தீயணைப்பு அவசர அழைப்பு 118
நஞ்சு 145

அவசரநிலை மருத்துவர் (24 மணி நேரமும் 365 நாட்களும்): தொலைபேசி இல. 0900 008 008 (சுவிஸ் பிரா. 3.23/நிமி.)

அவசரநிலை மருத்துவசேவை  தொலைபேசி இல. 0844 22 40 44

மாநில வைத்தியசாலையின் அவசர அனுமதிப்பிரிவு:
Notaufnahme Kantonsspital
:
Zuger Kantonsspital
Landhausstrasse 11, 6340 Baar
Anmeldung Notfallzentrum அவசரநிலை மருத்துவசேவை
Telefon +41 41 399 11 44
Telefax +41 41 399 11 41
www.zgks.ch - டொச்

மருத்துவக் காப்புறுதி (KVG)
சுவிற்சர்லாந்தில் 3 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் ஒவ்வொரு நபரும் நோய்களுக்கெதிராகவும் விபத்துக்களுக்கெதிராகவும் கட்டாயமாக காப்புறுதி செய்ய வேண்டும். உள்ளுராட்சி அலுவலகம் இதற்குரிய சான்றை உங்களிடம் கோரும். மருத்துவக் காப்புறுதிக் கட்டணம் குடியிருப்பு மாநிலத்தைப் பொறுத்தும் (காப்புறுதி) வழங்குநரைப் பொறுத்தும் மாறுபடுகின்றது.
சகல(காப்புறுதி) வழங்குநர்களினதும் பட்டியல்

கட்டணம் குறைக்கப்படல் (Prämienverbilligung)
பொருளாதார ரீதியாக மோசமான நிலையிலுள்ள நபர்களுக்கு உதவி கோரி விண்ணப்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன:

Ausgleichskasse Zug
Prämienverbilligung
www.akzug.ch - டொச்
Tel: +41 41 560 48 48
 

Weitere Informationen

Fusszeile

Deutsch