வேலை/தொழில்
வேலை அனுமதிப் பத்திரமொன்றினைப் (Arbeitsbewilligung) பெற்றுக் கொள்வதற்கு,நீங்கள் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
Amt für Wirtschaft und Arbeit
Aabachstrasse 5
6301 Zug
Tel. +41 41 728 55 20
Fax +41 41 728 55 29
info.awa@zg.ch
www.zg.ch/awa - டொச்
நீங்கள் வேலை தேடும் பட்சத்தில், இணையவலையமைப்பில்; பல்வேறு தளங்கள் உள்ளன அல்லது உள்ளுர் பத்திரிகையிலுள்ள விளம்பரங்களை அவதானிக்கவும்.
தவிரவும் நீங்கள் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்:
Regionales Arbeitsvermittlungszentrum RAV
Hertizentrum 6
6303 Zug
Tel. +41 41 728 25 88
info@rav.zg.ch
www.rav-zg.ch - டொச்
நீங்கள் உங்கள் வேலைத் தலத்தினை இழக்கும் பட்சத்திலும் பின்பு வேலயற்றோர் மானியப்பணத்தினைக் கோர விரும்பும் பட்சத்திலும், புதிய வேலை ஒன்றினை நீங்கள் கட்டாயம் தேடவேண்டும். இவற்றுடன் குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்காவது “வேலையிழந்தோர் நிதியத்தில்” ("Arbeitslosenkasse") பணம் செலுத்தியிருத்தல் வேண்டுமென்பதுடன் (ஒரு வருட காலத்திற்கு வேலை ஒன்றில் அமர்த்தப்பட்டிருத்தல் வேண்டும்) புதிய வேலை ஒன்றிற்கு நீங்கள் முயற்சிப்பதாக நிரூபிக்க வேண்டும்.
Arbeitslosenkasse des Kantons Zug
Industriestrasse 24
6301 Zug
Tel. +41 41 728 37 40
alk.zug@zg.ch
www.zg.ch/alk - டொச்
வீட்டுப்பணியாளர்
(18 வயதுக்கு மேற்பட்ட) வீட்டுப்பணியாளர்களை யார் வேலைக்கமர்த்துகின்றார்களோ, அவர்கள் இதனை மாநில ஊதிய அலுவலகத்தில் ;(Ausgleichskasse) கட்டாயம் பதியவேண்டும். வேலைக்கமர்த்தப்பட்ட நபர் விபத்துக்கெதிரான காப்புறுதியையும் கூட செய்திருத்தல் வேண்டும். .
Ausgleichskasse Zug
Tel. +41 41 560 47 00
info@akzug.ch
www.akzug.ch - டொச்
தொழிற்சங்கங்கள்
Gewerkschaftsbund Kanton Zug
Gen.-Guisan-Str. 30
6300 Zug
www.sgb.ch - டொச்