Navigieren auf Kanton Zug

குடியுரிமைச் சட்டவமைப்பு

இவ் விடயம் தொடர்பான தகவல்கள் திருமணம்/ஒரேபாலினத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டுவாழ்க்கை பிறப்பு இறப்பு

உங்கள் உள்ளுராட்சி அலுவலகத்தில் (“குடியிருப்பாளர் சரிபார்த்தல் / Einwohnerkontrolle”) நீங்கள் கட்டாயம் பதிவுசெய்து கொள்வதற்கும் பின்னர் பதிவை இரத்து செய்வதற்கும் விலாசமாற்றக்கள் போன்றனவற்றை அறிவிப்பதற்கும் கடமைப்பட்டுள்ளீர்கள். உங்கள் உள்ளுராட்சி வட்டத்தினுள் வசித்தல் தொடர்பான முக்கியமான தகவல்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

இவ் விடயம் தொடர்பான தகவல்கள்

  • திருமணம்/ஒரேபாலினத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டுவாழ்க்கை
  • பிறப்பு
  • இறப்பு

உங்களுக்குப் பொறுப்பான “சிவில்பதிவுக்காரியாலயத்தில் / Zivilstandsamt” நீங்கள் இவற்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.திருமணப்பதிவு மற்றும் பிறப்புப்பதிவு போன்றவற்றிற்கு அல்லது அலுவலக நடைமுறைகளுக்கு உங்கள் சொந்தநாட்டிலிருந்தான உத்தியோகபூர்வ ஆவணங்கள் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தேவைப்படலாமென்பதனை தயவுசெய்து கவனத்தில் கொள்ளுங்கள். எனவே முன்கூட்டியே சிவில்பதிவுக்காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

Zivilstandsamt Kreis Zug:
Zug, Steinhausen, Walchwil, Oberägeri, Unterägeri
Stadthaus am Kolinplatz
6300 Zug
Tel +41 41 728 20 29
zivilstandsamt@stadtzug.ch

Zivilstandsamt Kreis Baar:
Baar, Menzingen, Neuheim
Rathausstrasse 1
6340 Baar
Tel +41 41 769 01 30
zivilstandsamt@baar.ch

Zivilstandsamt Kreis Cham:
Cham, Hünenberg, Risch
Mandelhof
6330 Cham
Tel +41 41 723 87 40
zivilstandsamt@cham.ch

தத்தெடுத்தல் தொடர்பான கேள்விகளுக்கு கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
Direktion des Innern
Amt für Kindes- und Erwachsenenschutz
Bahnhofstrasse 12
Postfach 27
6301Zug
Tel. +41 41 723 79 70
Info.KES@zg.ch
www.zg.ch/KES - டொச்

விவாகரத்து மற்றும் ஒரேபாலினத்தைச் சேர்ந்தவர்களின் கூட்டுவாழ்க்கை (Scheidung und Auflösung der gleichgeschlechtlichen Partnerschaft) போன்ற விடயங்களுக்கு “மாநிலநீதிமன்றதினை” "Kantonsgericht" நாடுங்கள்.
 

Weitere Informationen

Fusszeile

Deutsch