குடியிருப்பு
வீடுகள் தொடர்பான வழங்கல்களை கீழ்வரும் இணையத்தளங்களில் “ஒன்லைன்” மூலமாகப் பெற்றுக்கொள்ளுங்கள்
www.amtsblatt.ch
www.homegate.ch
www.newhome.ch
www.immoscout.ch
வாடகைக் குடியிருப்பாளர் சட்டஉரிமை
நீங்கள் ஒரு வீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்கள் தனிநபர் விபரங்களும் உங்கள் பொருளாதார நிலைமையும் வேண்டப்படுதல் இயல்பானதொரு விடயமேயாகும்.தவிரவும் கடன் பதிவு விபரமும் சாதாரணமாக வேண்டப்படுகின்றது. மேலும் உங்களிடமிருந்து மூன்று மாதங்களுக்கான வாடகைக் கட்டணத்தினைக் கொண்ட “முற்பண வாடகைவைப்பு” (Mietzinsdepot) நிரந்தர வைப்பிலிடப்படும். மாதாந்த வாடகையுடன் மேலதிக செலவுகளும் "Nebenkosten" (தண்ணீர், வெப்பமூட்டல், . . . .) சேர்த்து மாதாந்தம் வங்கியினூடாச் செலுத்தப்படல் வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும்.
அநேக வாடகைக்குடியிருப்பு ஒப்பந்தங்கள் பங்குனி, ஆடி மற்றும் புரட்டாதி மாதத்தின் இறுதியில் நிறைவுக்கு கொண்டு வரப்படமுடியும்.
நிறைவுக்கு கொண்டு வரப்படுவதை அறிவிக்கும் காலத் தவணை (Kündigungsfrist) 3 மாதங்களாகும். வீட்டில் குடியேறும் பொழுதும் வீட்டை ஒப்படைக்கும் பொழுதும் “குறைபாடுகள் அறிக்கை” ஒன்று தயாரிக்கப்படும். வீட்டில் சாதாரணமான பாவனையின் மூலம் ஏற்படும் சேதங்களைவிட சேதங்கள் அதிகரிக்குமாயின் அவற்றினை வாடகைக் குடியிருப்பாளரே (அல்லது அவரது காப்புறதியே பொறுப்பேற்று) செலுத்த வேண்டும்.
வாடகைக் குடியிருப்பாளர் என்ற அடிப்படையில் நீங்களே வானொலி- மற்றும் தொலைக்காட்சிக் கட்டணங்களையும் (Radio- und Fernsehgebühren) செலுத்த வேண்டும் என்பதுடன் www.billag.ch இன் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
கழிவுகள்/குப்பைகள் அதிகாரபூர்வமான சூக் மாநில குப்பைச் சாக்குகளிலிடப்பட்டு அகற்றப்படல் வேண்டும். இது சகல சுப்பர் மார்க்கெட் களிலும் கிடைக்கின்றது (பணம் செலுத்தும் இடத்தில் கேட்கவும்). கழிவுகள்/குப்பைகளின் பெரும் பகுதி மறுசுழற்சி மூலம் மீள்பயன்பாட்டுக்குட்படுத்தப்படுவதனால் (recyclen) தனியாக அகற்றப்கடுகின்றது. இவை பற்றிய சகல தகவல்களையும் இக் குறிப்புப்படிவத்தில் உங்களது மொழியிலேயே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்: ZEBA.
சூக் மாநில வாடகைக் குடியிருப்பாளர் கழகம்
Mieterinnen- und Mieterverband Kanton Zug
mvzug@bluewin.ch
www.mieterverband.ch - டொச்
நீங்கள் சொந்தமாக வீடு (Wohneigentum) வாங்க விரும்பும் பட்சத்தில், ஆங்கிலத்திலான தகவல்களை:
www.zg.ch/behoerden/volkswirtschaftsdirektion/direktionssekretariat/lex-koller-englisch இன் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.