Navigieren auf Kanton Zug

வரி

வரி

சூக் மாநிலத்தில் தனிநபர்கள் தமது வருமானவரியையும் சொத்துவரியையும் (Einkommens- und Vermögenssteuern)) செலுத்துகின்றனர். இவ் வரிவீதம் சுவிற்சர்லாந்திலேயே மிகவும் குறைவானதென்பதுடன் ஏனைய அனேக அண்டை நாடுகளைவிட குறைவானதாகும். கட்டண(சம்பள) வீதங்கள் முன்னேற்கரமானவை.நீங்கள் ஒரு C வகை வதிவிடஅனுமதிப் பத்திரமொன்றினை வைத்திருப்பின், ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒரு வரிவிளக்க அறிக்கையினை பெற்றுக்கொள்வீர்கள். இதனை நீங்கள் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். வரி தொர்பான கணக்கீடு சாதாரணமாக ஆடிமாதத்தில் அனுப்பப்படுகின்றது. தவணை அடிப்படையில் செலுத்துவதற்கும் சாத்தியம் உள்ளது. நீங்கள் வேறொரு வதிவிடஅனுமதிப் பத்திரமொன்றினை வைத்திருப்பின், வரிவிதிக்கத்தக்க பகிர்மானங்களையுடையவர் என்பதனால், உங்கள் வரி நேரடியாகவே உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

குடிவரவுக்கான நிபுணத்துவ நிலையம் வரிவிளக்க அறிக்கை தொடர்பான கேள்விகளுக்கு உங்களுக்கு உதவுகின்றது www.fmzug.ch

Steuerverwaltung
Bahnhofstrasse 26
Postfach
6301 Zug
Tel. +41 41 728 26 11
Fax +41 41 728 26 99
internet.stv@zg.ch
 

Weitere Informationen

Fusszeile

Deutsch