Navigieren auf Kanton Zug

அரசியல்

சுவிற்சர்லாந்து கருத்தொருமைப்பாட்டுடன் கூடிய ஒரு நாடாகும்: அது இனரீதியாகவோ அல்லது மொழிரீதியாகவோ அல்லது சமய அடிப்படையிலோ உருவாக்கப்பட்ட ஒரு அலகு இல்லை. 1848 இலிருந்து இது ஒரு சமஸ்டிஅரசைக் கொண்ட நாடாகும். சுவிற்சர்லாந்தின் அரச கட்டமைப்பு கூட்டாட்சி அடிப்படையிலான ஒரு நாடு என்பதுடன் மத்திய, மாநில மற்றும் உள்ளுராட்சி அலகுகளாக அரசியல் மட்டத்தில் பிரிக்கப்படுகின்றது.

Bund: மத்திய (கூட்டாட்சி) என்றே சுவிஸில் இவ் அரசு குறிப்பிடப்படுகின்றது.இம் மத்திய அரசில் மூன்று வேறான அதிகாரங்கள் உள்ளன: நிர்வாக அலகு (மத்திய கூட்டாட்சி மன்றம்), சட்டமன்றம் ( பாராளுமன்றம்) மற்றும் நீதித்துறை (மத்திய கூட்டாட்சி உச்சநீதிமன்றம்). எல்லா மட்டங்களிலும் அதிகாரப்பகிர்வு செல்லுபடியாகின்றன (மத்திய, மாநில மற்றும் உள்ளுராட்சி).

Kantone: மாநிலங்கள் என்பன ஆரம்பத்தில்தனித்தனியே இருந்த நாடுகளாகும் என்பதுடன் இவை 1848 இல் ஒன்றாக மத்திய (கூட்டாட்சி) ஆக இணைந்து கொண்டன. சுவிற்சர்லாந்து 26 மாநிலங்களைக் கொண்டுள்ளது. சூக் இவற்றுள் ஒன்றாகும்.

அரசியல் உள்ளுராட்சி ஒன்றியங்கள் (politischen Gemeinden) ஆகக்கீழ் மட்டத்திலுள்ள அரச ஒழுங்கமைப்புகளாகும். மாநிலங்களிலிருந்தும் மத்தியிலிருந்தும் நிறைவேற்றவேண்டிய பணிகளுடன் உள்ளுராட்சி ஒன்றியங்கள் பல்வேறு துறைகளில் தமக்கான பணிகளையும் கூட மேற்கொள்வதற்கான அதிகாரத்தினையும் இவை கொண்டுள்ளன. இணைப்பு: சூக் உள்ளுராட்சி ஒன்றியங்கள்.

மத்திய அரசியலமைப்பின் பிரகாரம் சுவிஸ்நாட்டின் இறையாண்மை (Souverän), அதாவது அரசியல் ரீதியாக அதி உச்ச அதிகாரமுள்ள அலகு சுவிஸ்மக்களே(Schweizer Volk). இது சுவிஸ் குடியுரிமையுள்ள சகல வயதுவந்த ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்குகின்றது.18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடையவர்களுக்கும் மத்திய கூட்டாட்சி அரச மட்டத்தில் எவ்வித அரசியல் ரீதியான சட்ட உரிமைகளும் இல்லை. மக்களின் இறையாண்மையே பாராளுமன்றத்தினைத் (சட்டவாக்க சபை) தெரிவு செய்கின்றது. பாராளுமன்றம் அரசாங்கத்தினையும் (நிறைவேற்று) உச்ச நீதிமன்றதினையும் (நீதிபரிபாலனம்) தெரிவு செய்கின்றது. மூன்று அதிகார மட்டங்களும் கண்டிப்பாக (ஒன்றிலிருந்து ஒன்று சுயாதீனமானஅலகுகளாக) பிரிக்கப்பட்டுளளன. அரசியல்ரீதியான சாதனங்கள் மூலமாக சர்வஜன வாக்கெடுப்பு மற்றும் மக்கள்முன்முயற்சியூடாக சுவிஸ் மக்கள் அரசியலமைப்புச் சட்டத்திலும் முன்மொழியப்பட்ட சட்டத்திலும் நேரடியான செல்வாக்கைச் செலுத்த முடியும்.

கையேடு: சுவிஸ்நாட்டில் நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள் (Willkommen in der Schweiz)

Weitere Informationen

Fusszeile

Deutsch