இயங்குதல் / போக்குவரத்து
வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு ஆகக்கூடியது 12 மாதங்களுக்குள் சுவிஸ் நாட்டு வாகனஅடையாளப் பத்திரமும் சுவிஸ் நாட்டு கட்டுப்பாட்டு இலக்கத்தகடும் பெறப்பட்டிருத்தல் வேண்டும். அதிகார பூர்வமான பதிவுக்கு முன்னர் வாகனத்துக்கு சுங்கவரி செலுத்தப்பட்டிருப்பதுடன் இது அதிகாரபூர்வமாக சுவிஸில் பரிசிலிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
பரிசீலனை அட்டவணை (ஆங்கிலம்) கீழிறக்கம்
நீங்கள் வாகனம் செலுத்துபவராயின், இந் நாட்டினுள் நீங்கள் பிரவேசித்த பின் ஆகக்கூடியது 12 மாதங்களில் சுவிஸ் நாட்டு வாகனஅனுமதிப்பத்திரம் (Führerausweis) ஒன்றுக்கு கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். விதிவிலக்கு: நீங்கள் தொழில் ரீதியாக சாரதியாக பணிபுரியுமிடத்தில் உங்கள் வாகனஅனுமதிப்பத்திரம் உடனடியாகவே, அதாவது முதலாவது தொழில் ரீதியான பாவனையின் முன்பே, கட்டாயமாக மாற்றி எழுதப்பட வேண்டும்.
Strassenverkehrsamt
Hinterbergstrasse 41
6312 Steinhausen
Tel. +41 41 728 47 11
Fax +41 41 728 47 27
info.stva@zg.ch
சூக்மாறிலத்தின் பொதுமக்கள் போக்குவரத்துக்கட்டமைப்பு மிகவும் செறிவானதென்பதுடன் புகைவண்டி, பேரூந்து (பஸ்) வண்டிகள் மற்றும் கப்பல்களினதும் போக்குவரத்து நேரங்கள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருப்பதுடன் தொடர்புள்ளன. சூக் நாட்டின் மத்தியில் அமைந்துள்ளமையால் சூறிச் அல்லது லுசேர்ண் 30 நிமிட நேரத்திற்கும் குறைவான நேரத்திலும் குளோற்றென் விமான நிலையத்தினை 40 நிமிடங்களிலும் சென்றடைய முடியும்.
பிரயாணச் சீட்டுக்கள் பிரயாணத்திற்கு முன்பே பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். பிரயாணச் சீட்டுக்கள் விற்கப்படும் இடங்களில் (“கருமபீடம்”), பிரயாணச் சீட்டுக்களைக் கொண்ட தானியங்கி இயந்திரங்கள் (“ரிக்கற் ஓட்டோமாற்”) அல்லது ஒன்லைன் இல். பொதுமக்கள் போக்குவரத்தினை அதிகமாகவும் தொடர்ந்தும் பாவிப்பவர்களுக்கென பல்வேறு சலுகைகளும் சந்தா அடிப்படையிலான நன்மைகளும் உள்ளன. இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் நல்ல பலனைக் கொடுக்கும்.
www.sbb.ch - de/en/fr/it
www.zvb.ch - de/en
“கார் பகிர்ந்து கொள்ளல்” (”கார் செயறிங்”): www.mobility.ch