Navigieren auf Kanton Zug

சூக் மாநிலம் பற்றிய சிறுவிளக்கம்

சூக் மாநிலமே சுவிற்சர்லாந்திலுள்ள மிகச் சிறிய மாநிலமாகும். இது சுவிற்சர்லாந்தின் இதயபூமியாக மலைகள் மற்றும் குளங்களால் சூழப்பட்டு எழில் மிகு இயற்கைத் தோற்றங்களைக் கொண்டுள்ளதுடன் சூறிச் மற்றும் லுசேர்ண் நகரங்களிலிருந்து 30 நிமிட பயணத் தூரத்திலேயே உள்ளது. தற்பொழுது இங்கு 120 தேசிய இனங்களைச் சேர்ந்த 110.000 குடிமக்கள் வசிக்கின்றனர். தவிரவும் சூக் ஒரு மிக முக்கியமான வர்த்தக மையமாகும். இங்கு 80.000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதுடன் பல்வேறு சர்வதேச தொழில்நிறுவனங்களின் இருப்பிடமாகவும் இது அமைந்துள்ளது. இது சூக் வாழ் மக்களின் மனோபாவத்தில் நன்கு பதியப்பட்டுள்ளது. இம் மக்கள் சகிப்புத் தன்மை, திறந்த மனப்பான்மையுடையவர்கள் என்பதுடன் புதியனவற்றை அறிய ஆவலுள்ளவர்கள். சூக் மாநிலத்தில் 11 சமூகக் குடியிருப்பு அலகுகள் (11 Gemeinden) உள்ளன.

Weitere Informationen

Fusszeile

Deutsch