Navigieren auf Kanton Zug

ஒருங்கிணைந்து வாழ்தல்

integration tamilisch

சூக் மாநிலத்தில் “ஒருங்கிணைந்து வாழ்தல் நிபுணத்துவநிலையம்;” "Fachstelle Integration" என்னும் நிலையம் ஒருங்கிணைந்து வாழ்தல் தொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கின்றது. இந் நிலையமே சமவாய்ப்பு, பாகுபாடு காட்டுதல் மற்றும் இனவாதம் போன்றன சம்பந்தமான கேள்விகளுக்குரிய மாநிலத் தொடர்பு மையமாகும்.

உங்களது புதிய இத் தாய்நாட்டில் நல்ல உணர்வுடன் வாழ்வதற்கும் உங்கள் சட்ட உரிமைகளை தெரிந்து கடைப்பிடிப்பதற்கும் சமூகவாழ்வில் ஒன்றிணைந்து பங்கு பற்றுவதற்குமான அதிசிறந்த வழி டொச் மொழியினைக் கற்பதாகும். “ஒருங்கிணைந்து வாழ்தலுக்கான நிபுணத்துவநிலையம்” www.fmzug.ch வெளிநாட்டு வேலைபெறுநர்களுக்கு எல்லாப் படிநிலைகளிலுமுள்ள டொச் கற்கைநெறிகள் தொடர்பான பல்வேறு சலுகைகள் தொடர்பன தகவல்களை வழங்குகின்றது. இந் நிலையம் சுவிஸ் நாட்டில் வாழ்க்கைக்கு பயன்பாடுள்ள ஏனைய கற்கை நெறிகள் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றது. மேலதிக சலுகைகள் மற்றும் வழங்கல்களை கீழுள்ள இணையத்தள முகவரியின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்: www.integration-zentralschweiz.ch

www.migraweb.ch எனும் இணையத்தளம் பல்வேறு பயனுள்ள தகவல்களையும் சுவிஸ் நாட்டில் நாளாந்த வாழ்க்கை தொடர்பான தகவல்களையும் 19 மொழிகளில் வழங்குகின்றது.

பாகுபாடு காட்டுதல் மற்றும் இனவாதம்
சுவிற்சர்லாந்து ஒரு ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இங்குள்ள ஒவ்வொரு தனிமனிதனினதும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு நபரும் தனது பூர்வீகம், இனம், பால், வயது, மொழி, சமூக நிலை, வாழ்க்கைமுறை, சமய, அரசியல் அல்லது உலகப்பார்வை தொடர்பாகவோ அல்லது உடல், உளவியல் அல்லது மனோவியல் ரீதியான குறைபாடு (ஊனம்) காரணமாகவோ பாகுபாட்டிற்குட்படுத்தப்படலாகாது. இவர்களது உரிமைகள் இந்நாட்டு சமஸ்டி அரசியலமைப்புச் சட்டத்தில் நிரந்தரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. 

சுவிஸ் நாட்டின் குற்றவியல் சட்டத்தில்; இனப்பாகுபாட்டுக்கொதிரான நடவடிக்கைககள் தண்டைனக்குரியனவாகும்.ஒருவர் தனது தோல்நிறம் அல்லது பூர்வீகம் அல்லது சமயம் காரணமாக பொது இடங்களில் பாகுபாட்டுக்குட்படுத்தப்படல் தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுமக்களுக்கென ஒதுக்கப்பட்ட சேவைகள் வழங்க மறுத்தல் கூட இவற்றிலடங்கும். 
 

Weitere Informationen

Fusszeile

Deutsch