Navigieren auf Kanton Zug

குடிவரவு

Immigration tamilisch

சுவிற்சர்லாந்திற்கு வருவதற்கு பல்வேறு ஒழுங்குவிதிகள் நடைமுறையிலுள்ளன ( உதாரணமாக: உல்லாசப் பயணிகளுக்கு, தொழில் செய்வதற்கு வருபவர்களுக்கு, உயர்கல்விக்கு அல்லது ஓய்வூதிய காலத்தைக் கழிப்பதற்கு வருபவர்கள்). ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சாராதவர்களுக்கிடையிலும் கூட வித்தியாசமான ஒழுங்கு விதிகள் உள்ளன. இங்கு பிரயாணித்து வருவதற்கு முன்பே இவற்றை கேட்டுத் தெரிந்து கொள்ளல் சாலச் சிறந்தது. உங்கள் நாட்டிலுள்ள சுவிற்சர்லாந்தின் பிரதிநிதித்துவத்துடன்(உயர்ஸ்தானிகராலயத்துடன்) தொடர்புகொண்டு வினவுங்கள்.

நீங்கள் வெளிநாட்டிலிருந்து அல்லது பிறிதொரு மாநிலத்திலிருந்து இங்கு வந்து குடியேறுகையில், 14 நாட்களுக்கிடையில் குடிவரவுக்கான அலுவலகம் (Amt für Migration) உடன் தொடர்பு கொள்ளுங்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சாராதவராயின் (EU/EFTA Bürger) வேறொரு மாநிலத்திற்குச் சென்று குடியேறுவதற்கு உங்களுக்கு ஒரு அனுமதி அவசியமானதாகும்.

Amt für Migration
Aabachstrasse 1
Postfach 857
6301 Zug
Tel. +41 41 728 50 50
info.afm@zg.ch
www.zg.ch/afm - டொச்

Für allgemeine Informationen:
Fachstelle Migration
Zeughausgasse 9, 6300 Zug
திங்கள் முதல் வியாழன்  11:00-12:00 ஃ 13:30 - 16:00
தொலைபேசி: +41 (0)41 728 22 76
welcome.desk@fmzug.ch 
www.fmzug.ch

ஐரோப்பிய ஒன்றிய EU மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக வலய நாடுகளாகிய EFTA
நாட்டுப்பிரஜைகள் (EU and EFTA-Angehörige)
ஐரோப்பிய ஒன்றிய EU மற்றும் EFTA நாட்டுப்பிரஜைகள் தொடர்பான தாராள இணக்கப்பாட்டுத்தன்மையை அறிமுகப்படுத்துதல் படிப்படியாகவே நடைபெறுகின்றது. பழைய ஐரோப்பிய ஒன்றிய EU நாடுகளுக்கு (EU -17 மால்ற்றா மற்றும் சைபிரஸ் உள்ளடங்கலாக) முழுமையான தாராள இணக்கப்பாட்டுத்தன்மை செல்லுபடியாகும்.மேலதிக தகவல்களுக்கு. . . . (de/en/fr/it)

ஏனைய நாடுகள் தொடர்பான தகவல்களுக்கு குடிவரவுக்கான அலுவலகம் (Amt für Migration) உடன் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

EU / Efta நாடுகளினுடைய பட்டியல் (de/en/fr/it)

EU மற்றும் Efta நாடுகளைச் சேராத ஏனைய நாட்டுப்பிரஜைகள்
உள்நாட்டு வேலைவாய்ப்புச் சந்தையிலும் EU/Efta நாடுகளிலிருந்தும் முன்னுரிமையுடன் (அதாவது சுவிற்சர்லாந்திலிருந்து அல்லது EU/Efta நாடுகளிலிருந்து) எவரும் இல்லாதிருக்கும் பட்சத்தில்தான் EU மற்றும் Efta நாடுகளைச் சேராத ஏனைய நாட்டுப்பிரஜைகள் அனுமதிக்கப்படுவது சாத்தியமானதாகும்.வேலைவழங்குநர் தாம் பல்வேறுவிதமான தேடுதல்முயற்சிகள் மேற்கொண்டபொழுதும் பொருத்தமான தொழில் வல்லுனர்களை சேர்த்துக் கொள்ளமுடியாமல் போய்விட்டதாக நிரூபிக்க வேண்டும். EU/Efta நாடுகளைச் சேராத ஏனைய நாட்டுப்பிரஜைகளுக்கு எவ்வாறாயினும் ஒரு வேலைஅனுமதிப்பத்திரம் அவசியமானதாகும்.

Amt für Wirtschaft und Arbeit
Aabachstrasse 5 6301 Zug
Tel. +41 41 728 55 20
Fax +41 41 728 55 29
info.awa@zg.ch
www.zg.ch/awa - டொச்

வதிவிட அனுமதிப்பத்திரம்: Aufenthaltsbewilligungen (de/en/fr/it)
 

Weitere Informationen

Fusszeile

Deutsch