கல்வி
சூக் மாநிலத்தில் கட்டாய பாடசாலைக் கல்விக் காலம் 10 வருடங்களாகும்: 1 வருடம் பாலர் பாடசாலை (5 ஆகக்கூடியது 6 வயதிலிருந்து) 6 வருடங்கள் பிறிமாசூலெ எனப்படும் ஆரம்பப்பாடசாலை, 3 வருடங்கள் இடைநிலைப் பாடசாலை. பாடசாலைக் கல்வி ஆண்டு ஆவணி மாதத்திலேயே தொடங்குகின்றது
சூக் மாநிலத்தில் கல்விச்சேவைவழங்கல் மிகவும் பரந்து பட்டதாகும். சூக் மாநிலத்தில் அனேக சர்வதேச பாடசாலைகளும் கூ உள்ளன.
கட்டாய பாடசாலைக் கல்விக் காலத்தின் முடிவில் அநேக இளைஞர் யுவதிகள் ஒரு தொழில் தொடர்பான போதனைக் கல்வியையும் (Lehre) அதன் பின் தொழில்துறைசார் டிப்ளோம் (Berufsdiplom) ஒன்றினையும் பெற்று நிறைவு செய்கின்றனர் அல்லது உயர்நிலைப்பள்ளி (Gymnasium) க்கு செல்கின்றனர். எவ்வாறாயினும் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு அல்லது தொழில்துறைசார் உயர் கல்வி நிலையத்திற்குச் செல்கின்றனர். Link: educa.ch d/e/i/f
வேற்று மொழிகளைப் பேசுகின்ற இங்கு வந்து குடியேறும் 14 முதல் 21 வயதுக்துக்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புச் சலுகைகளும்"Integrations-Brückenangebot I-B-A" தொழில் உலகில் சிறந்த தொடக்கத்தினை ஏற்படுத்துமுகமாக நேர்த்தியான சலுகைகள் உள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய பெற்றோர்கள் பாடசாலையில் சேர்க்கப்படல் தொடர்பான சகல கேள்விகளுக்கும் கீழ்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்:
Bildungsdirektion
Abteilung Schulaufsicht
T +41 41 728 31 50
info.schulaufsicht@zg.ch
www.zg.ch/schulen - டொச்
www.zg.ch/schools - ஆங்கிலம்
டிப்ளோமாக்களை (பட்டப்படிப்புக்களை) அங்கீகரித்தல் (de/en/fr/it)